இனி சுங்கச்சாவடியில் நிற்க தேவையில்ல... சாட்டிலைட் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்!

இந்தியாவில் எந்தவொரு நகரங்களுக்கும் விரைவாக பயணிக்க நெடுஞ்சாலைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. நெடுஞ்சாலை பயணங்களுக்கு சுங்கச்சாவடிகள் இடையூறாக இருக்கலாம். பல இடங்களில் சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கலாம் எனத் தெரிகிறது. அதை தவிர்க்கும் வகையில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்ட் டேக் முறையை கொண்டு வந்தது. சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் பெருவாரியாக குறைந்துள்ளது.
அடுத்தகட்டமாக நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணம் உருவாக்க ஒரு முக்கிய நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் சாட்டிலைட் அடிப்படையிலான புதிய சுங்க கொள்கையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண வசூலிக்கும் முறை என்பது அடுத்த 15 நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இந்த புதிய முறை அமலுக்கு வந்துவிட்டால் இனி வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை. மேம்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட்டிலைட் அடிப்படையில் சுங்கக் கட்டணங்கள் தானாகவே கழிக்கப்படும். இதன் மூலம் நெடுஞ்சாலைகளில் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பயணம் செய்யலாம்.
இப்போது பாஸ்ட் டேக் முறை அமலுக்கு வந்துவிட்ட பிறகும் பல சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டி இருக்கிறது. அதை சரி செய்யவும் எரிபொருளை சேமித்தல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயண நேரத்தை குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பை நவீனமயமாக்கும் எனவும் நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனுபவத்தை மேம்படுத்தும் என நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவிக்கையில் ‘இனி வாகனங்கள் செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்படும். வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறதோ, அதற்கேற்ப வாகனத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து சுங்கக்கட்டணம் நேரடியாக கழிக்கப்படும். இன்னும் 15 நாட்களில் இந்த முறை அமலுக்கு வரும். இந்த புதிய முறை சுங்க கட்டண வசூல் வந்தால் அது நமது நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பிற்கு மிக பெரிய உற்சாகத்தை தரும். நெடுஞ்சாலைகளில் பயணங்கள் இன்னும் வேகமாகவும் திறன் மிக்கதாகவும் மாறும்’ எனத் தெரிவித்துள்ளார். முதலில் சோதனை முறையில் இந்த சுங்கக்கட்டண முறை நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்னர் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிகிறது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!