திமுக ஆட்சியை யாரும் குறை சொல்லமுடியாது... அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

 
கீதாஜீவன்

 பல்வேறு அரசு துறைகளில் சாதனை படைத்து நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கி பேசினார்.

கீதாஜீவன்

அப்போது அவர், “தூத்துக்குடி மொழிப்போர் தியாகிகள் அதிகம் நிறைந்த ஊராகும். திமுகவை பொறுத்தவரை ஜாதி, மத வேறுபாடு கிடையாது. எம்மதமும் சம்மதம் என்கிற கொள்கையை மதிக்கிறோம். மதவெறியைதான் எதிர்க்கிறோம். கீழ்தட்டு மக்கள் அனைவரையும் வாழ்க்கையில் கை தூக்கி விட வேண்டும் என்ற எண்ணம் உள்ள கட்சி திமுக

 

அமைச்சர் கீதாஜீவன்

திமுக ஆட்சியை யாரும் குறை சொல்லமுடியாது. ஆனால் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களான உதிரி கட்சிகளும், சில எதிரி கட்சிகளும் குறைசொல்லி வருகின்றனா். தமிழக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து இந்தியாவிற்கே முன்மாதிரியான மாநிலமாக திகழ்கிறது என்று மத்திய அரசின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு, மத்திய அரசே பாராட்டி வருகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது