யாரும் தண்ணீ கூட தரலையே!! மருமகளை வெட்டி சாய்த்த வழக்கில் உறவினர்கள் கதறல்!!

 
அனுசுயா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி ஊரைச் சேர்ந்தவர் சுபாஷ் (25). இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தபோது, அரியலூர் மாவட்டத்தை அனுசுயா (25) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டு திருப்பத்தூரில் வசித்து வந்தனர். இதனை அறிந்த சுபாஷின் தந்தை தண்டபாணி காதலர்கள் இருவரையும் கடந்த சொந்த ஊராண ஊத்தங்கரைக்கு அழைத்து வந்து வீட்டில் தங்க வைத்தார். சுபாஷின் தந்தை தண்டபாணி அவரது மகன் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

அனுசுயா

இனதால் வீட்டுக்கு அழைத்த மறுநாளான சனிக்கிழமை அதிகாலை தண்டபாணி அவரது மகன் சுபாஷ், மனைவி அனுசுயா, மற்றும் சுபாஷின் பாட்டி ஆகிய மூன்று பேரையும் சரமாரியாக வெட்டினார். இதில் சுபாஷ் மற்றும் அவரது பாட்டி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது இளம்பெண் அனுசுயா தப்பியோடியதால் வெட்டு காயங்களுடன் தப்பினார்.

எனினும் சாலையோரத்தில் வெட்டுகாயங்களுடன் தவித்துள்ளார். பின்னர் போலீசார் சென்று அனுசியாவை மீட்டு உடனே ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தற்போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுசுயாவிற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 

இந்த நிலையில் சேலம் ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி தங்க கார்த்திகா, அரசு மருத்துவமனைக்கு சென்று அனுசியாவிடம் இரண்டு மணி நேரம் வாக்குமூலத்தை பதிவு செய்தார். தலை, கைகள், கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த அனுசுயாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அனுசியாவின் நிலையைக் கண்டு குடும்பத்தினர் நிலை குலைந்து கிடக்கின்றனர். 

அனுசுயா

இதுகுறித்து அனுசுயாவின் தந்தை சுவாமிநாதன் கூறுகையில், பெண்ணின் முகத்தை பார்க்கும் போது என்ன சொல்வது என்று தெரியவில்லை. மிகவும் வேதனையாக உள்ளது. என் பொண்ணு வெளியே வந்து என்ன சொல்லுதோ அதைத்தான் தீர்ப்பாக வழங்க வேண்டும், என்று கூறினார்.

உறவினர்கள் கூறுகையில், எங்களது குடும்பத்தில் முதல் பட்டதாரி அனுசியா. எப்படியாவது பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என கஷ்டப்பட்டு படிக்க வச்சோம். இரண்டு கைகள், தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் அனுசியாவை வெட்டி உள்ளார். தண்டபாணிக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். வேற்று சாதி பெண் என்பதால் அந்த ஊரில் உள்ள யாரும் அனுசுயாவிற்கு தண்ணீர் கூட தரவில்லை, என்று கூறினார். தண்டபாணி கைது செய்யப்பட்டு இந்த வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web