புதிய ரூ2000 நோட்டுக்கள் அச்சிடும் திட்டம் கிடையாது!! மத்திய அரசு திட்டவட்டம்!!

 
ரூ2000

பிரதமர் மோடி இந்தியாவில் கள்ளநோட்டுக்களை ஒழிக்க  2016 நவம்பர் 8ம் தேதி இரவு திடீரென பணமதிப்பழிப்பு நடவடிக்கையை அதிரடியாக செயல்படுத்தினார்.  அதன்படி ஏற்கனவே இருந்த பழைய ரூ 500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் திருப்பி அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.  அத்துடன் பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய வடிவிலான ரூ500 மற்றும் ரூ2,000 நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டன. அதை தொடர்ந்து புதிய  100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன.

ரூ2000


இதனிடையே கருப்புப்பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்துவிட்டு அதை விட அதிக மதிப்பு கொண்ட ரூ 2000 ரூபாய் நோட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் பதுக்கல் பணங்கள் அனைத்துமே ரூ2000 நோட்டுக் கட்டுக்களாகவே பிடிபட்டன. இதனால் ரூ2000 நோட்டுக்கள் அச்சிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என  பரவலாக கருத்துக்கள் எழுந்தன.  இந்நிலையில், ரூ2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் பணியை நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணம்


நாடாளுமன்ற 2 வது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாகூர், 2019ம் ஆண்டிலேயே ரூ2000 நோட்டுக்கள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நோட்டுகள் அச்சிடப்படவே இல்லை. . இப்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளே போதுமானது என மதிப்பிடப்பட்டதால்  புதிய ரூ.2000 நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என விளக்கம் அளித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web