மெட்ரோ பயண அட்டை தொலைந்தால் பணம் கிடையாது… நிர்வாகம் எச்சரிக்கை!
சென்னை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மெட்ரோ பயண அட்டை அல்லது சிங்கார சென்னை அட்டை தொலைந்துபோனால், அதில் உள்ள இருப்புத் தொகையை வேறு அட்டைக்கு மாற்றவும், திரும்பப் பெறவும் முடியாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மெட்ரோ பயணம் மற்றும் வாகன நிறுத்தக் கட்டணங்களுக்கு இந்த அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.
தொலைந்துபோன அட்டைகளில் மீதமுள்ள பணத்தை எந்தச் சூழ்நிலையிலும் மீட்டெடுக்க முடியாது என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் தங்கள் பயண அட்டைகளை மிகுந்த கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அட்டை இழப்பால் ஏற்படும் இழப்புக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
தொழில்நுட்ப காரணங்களாலும், ஆர்பிஐ வழிகாட்டுதல்கள் மற்றும் வழங்குநர் கொள்கைகளின்படியும், தொலைந்துபோன சிங்கார சென்னை அட்டையின் இருப்புத் தொகையை திருப்பி வழங்க இயலாது என கூறப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதே ஒரே வழி என மெட்ரோ நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
