ரூ2000 நோட்டுகளுக்கு கட்டுப்பாடு இல்லை!! ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!!

 
ரூ2000

2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் மத்திய அரசு பழைய ரூ500, ரூ1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ500, ரூ.2000 நோட்டுகள்  புழக்கத்தில் விடப்பட்டன. தற்போது ரூ2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ2019ம் ஆண்டே ரூ2000 நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பணம்

ரூ. 2000 நோட்டுகள் விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டாலும்  செப்டம்பர் 30ம் தேதி வரை ரூ2000நோட்டுகள் செல்லும் என்று கூறியுள்ளது.  மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிக்குள் ரிசர்வ் வங்கி கிளைகளில் ரூ20000வரை ரூ2000 நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 20,000 வரை மட்டுமே ரூ2000 நோட்டுகளை மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பணம்
இந்நிலையில் ரூ2000 நோட்டுக்களை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கி கணக்கில் செலுத்துவதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.  ரூ.2000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து பிற நோட்டுகளாக மாற்ற மட்டுமே கட்டுப்பாடுகளே தவிர அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்த கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது  என விளக்கம் அளித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web