ஒரு பலனும் இல்ல... நீட் விலக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம்... அதிமுக புறக்கணிப்பு...இபிஎஸ் ஆவேசம்!

 
இபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி!!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை ஆளுநர் ஆர்.என். ரவி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மசோதாவை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக சில நாள்களுக்கு முன்பு பேரவையில் கூறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இதுகுறித்து விவாதிக்க ஏப்ரல் 9 ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தார். 

இபிஎஸ்

நீட் விலக்கு தொடர்பாக தமிழிக அரசின் சட்டப்போராட்டம் தொடரும் எனவும் இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.

இபிஎஸ்

நீட் விலக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ளாது எனவும், திமுக நடத்தும் கூட்டம் ஒரு நாடகம் எனவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் திமுக அரசு நடத்தும் இந்த கூட்டத்தால் ஒரு பலனும் இல்லை எனவும் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web