இந்தியர்களுக்கு இனி NO விசா.. தாய்லாந்து அரசு அறிவிப்பு!

 
தாய்லாந்து விசா

தாய்லாந்திற்கு செல்லும் இந்தியப் பயணிகள் தாய்லாந்தில் தரையிறங்குவதற்கு முன்னரோ அல்லது பின்னரோ விசா பெறத் தேவையில்லை என்றும், நவம்பர் 11ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த விசா சலுகையை தாய்லாந்து அரசு காலவரையின்றி நீட்டித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தாய்லாந்து அரசு இந்தியர்களுக்கு விசா இல்லாத நுழைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் இந்திய குடிமக்கள் விசா இல்லாமல் நீண்ட காலம் தாய்லாந்தில் தங்க முடியும். நவம்பர் 11, 2024 அன்று முடிவடைய இருந்த விசா தளர்வு இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்கலாம். உள்ளூர் குடியேற்ற அலுவலகத்தில் விண்ணப்பிப்பதன் மூலம் இந்தியர்கள் தங்குமிடத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்கலாம்.

விசா தாய்லாந்து வெளிநாடு விமானம்

இந்தியர்களுக்கான விசா இல்லாத நுழைவு நீட்டிப்பு காரணமாக தாய்லாந்திற்குச் செல்லத் திட்டமிடும் இந்தியர்களுக்கு சுற்றுலா மிகவும் எளிதாகிவிட்டது. புதிய ஆவணம் இல்லாத செயல்முறையின் காரணமாக 2024 ஜனவரி மற்றும் அக்டோபர் இடையே இந்தியாவின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 16.17 மில்லியனாக அதிகரித்துள்ளது. விசா இல்லாத நுழைவு, தாய்லாந்துக்கு வார இறுதி நாட்களில் இந்தியர்கள் செல்வது அதிகரித்துள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web