உண்ணாவிரதப் போராட்டம்… நோபல் பரிசு பெற்ற நா்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை!

 
iran
 

ஈரானைச் சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மனித உரிமை போராளி நா்கீஸ் முகமதிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் அவர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 53 வயதான முகமதி ஈரானில் மனித உரிமை குரலாக அறியப்படுகிறார்.

ஹிஜாப் அணியாததால் காவல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாஷா அமீனி உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. அந்த போராட்டங்களுக்கு சிறையில் இருந்தபடியே நா்கீஸ் முகமதி ஆதரவு திரட்டினார். இதனால் உலகளவில் அவரது பெயர் அதிகமாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதல் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த நடவடிக்கையை காரணமாகக் கொண்டு அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!