தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனுக்கள் விநியோகம்; டிச.20 கடைசி நாள்.. அன்புமணி அறிவிப்பு!

 
அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள தொகுதிகளில் பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து, இன்று டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

 ராமதாஸ், அன்புமணி

போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பதாரர்கள், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை பனையூரில் உள்ள கட்சித் தலைவர் அலுவலகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். இன்று (டிசம்பர் 14) முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

அன்புமணி

விண்ணப்பங்களை வாங்கும் நபர்கள், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைக் கடைசி நாளான டிசம்பர் 20-ஆம் தேதி மாலை 6 மணிக்குள், பனையூர் அலுவலகத்தில் தலைமை நிலைய நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ம.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!