இதற்கெல்லாம் அனுமதி இல்லை... வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கோவை மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு பிப்ரவரி 1 ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் இங்கு வந்துச் செல்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் 6 வது மலையில் உள்ள தண்ணீர் குட்டையில் ஈரத் துணிகளை வீசுவது, சமதளத்தில் உள்ள மரக்கன்றுகளை நடவு செய்து அதனை வீடியோவாக எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாற்றான மரக்கன்றை வனத்துறையினர் அகற்றி விட்டனர். மேலும் வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வனத்துறை வெளியிட்டுள்ளது.
அதில் வனத்துறை அனுமதித்த பாதை மட்டுமே செல்ல வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
வனப்பகுதியில் அனுமதியின்றி மரக்கன்றுகளை நடவு செய்ய கூடாது.
வெள்ளிங்கிரி 6வது மலையில் ஈரத்துணிகளை அங்கேயே போட்டு விட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இதனை வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் பின்பற்ற வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!