தென்கொரியா மீது குண்டுமழை பொழிந்து வடகொரியா திடீர் தாக்குதல்... பீதியில் உலக நாடுகள்... !

 
பீரங்கி குண்டு

 கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரஷ்யா - உக்ரைன்  போர் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. மறுபக்கம்  இஸ்ரேல் - ஹமாஸ்    போர் நடைபெற்று வருகிறது. இந்த வரிசையில் தற்போது தென்கொரியா, வடகொரியா தாக்குதல் தொடங்கியுள்ளது . இந்த திடீர் போர் தாக்குதலால்  உலக நாடுகள்பெரும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளன. 3ம் உலகப்போர் மூண்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.  தென்கொரியாவின்  யோன்பியாங் தீவுப்பகுதியில்  வடகொரியா ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது.

பீரங்கி குண்டு தாக்குதல்

அங்கு வசித்து வரும் மக்கள் உடனடியாக தீவை விட்டு   வெளியேற தென்கொரியா அரசு  உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஏற்கனவே  அமெரிக்காவுக்கும்,  வட கொரியாவுக்கும்  இடையில் நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து  வருகிறது.  அமெரிக்கா  தென் கொரியாவுடன்  இணைந்து,   ராணுவ பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இது போன்ற செயல்களால்  வட கொரியா ஆத்திரம் அடைந்துள்ளது. இதன் அடிப்படையில்  வட கொரியாவின் ஆயுத பலங்களை அதிகரிக்க அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

கிம்


அந்த வகையில் இன்று   தென் கொரியாவுக்கு சொந்தமான எல்லைப் பகுதியான  யோன்பியாங் தீவு பகுதியில் வட கொரியா ராணுவம்   திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. காலை 9 மணி முதல் 11 மணிக்குள் 200க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளால்  தாக்குதலை தொடங்கி  ராக்கெட் தாக்குதலையும் நடத்தியுள்ளது.  தென் கொரியாவுடன் இணைந்திருக்கும் அதன் நட்பு நாடுகளான அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கு  எதிரான போருக்கு தயாராக இருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னறிவிப்பு ஏதுமின்றி நடைபெற்ற இந்த திடீர் நேரடி தாக்குதலால்   போர் மூளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web