தனியாக இருந்த பெண்ணின் வீட்டு கதவை தட்டிய வடமாநில இளைஞர்... மின்கம்பத்தில் கட்டி வெளுத்து வாங்கிய கிராம மக்கள்!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் செண்டூர் கிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் 35 வயது சேதுராமன் . இவர் ஜேசிபி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 30 வயது ஷாலினி . இவர் தனது கணவர் பணிக்கு சென்றபிறகு வீட்டில் தனியாக இருந்து வேலைகளை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணிக்கு சேதுராமனின் வீட்டை மர்ம நபர் ஒருவர் தட்டியுள்ளார்.
அப்பொழுது கதவை திறந்த ஷாலினி எதிரில் வடநாட்டு இளைஞர் ஒருவர் போதையில் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் அந்தப் பெண்ணை ஆக்ரோஷமாக துரத்தியதால் பயத்தில் ஷாலினி கூச்சலிடவே அங்கிருந்த கிராம பொதுமக்கள் அந்த மர்ம நபரை பிடித்து அடித்தனர். பின்னர் அருகில் இருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து மயிலம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த மர்ம நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஜார்க்கண்ட் மாநிலம், சாயித் கண் மாவட்டம், ஆசான் போலா கிராமத்தில் வசித்து வரும் 27 வயது தாவுத் துடு . இவர் நொரசு துடுவின் மகன் என்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த நபருடன் இரண்டு நண்பர்கள் வந்ததாக கூறப்படுகிறது. அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று கிராமத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் கொள்ளையடிக்க முயற்சி செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!