உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு படைகளை அனுப்பிவைக்க வடகொரியா முடிவு?!

 
வடகொரியா ரஷ்யா


 
ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையே  நடைபெற்று வரும் போரில் ஈடுபட கூடுதல் படைகளை ரஷ்யாவிற்கு வடகொரியா அனுப்பி வைக்க இருப்பதாக   தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியா
இது குறித்து வெளியான தகவலின்படி ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் ராணுவத்தினர் அனுப்பிவைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.  ரஷ்யாவிற்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாக தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர்கள்  உளவுத்துறை நிறுவனத்தை மேற்கோள் காட்டி தெரிவித்தனர்.

உக்ரைன் ரஷ்யா
அதனுடன் ராணுவ தடவாளங்களும் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்க வடகொரியா முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக விண்வெளி சம்பந்தமான  தொழில்நுட்ப ஆலோசனைகளையும், ஏவுகணைகள் அமைப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்களையும் ரஷ்யாவிடம் இருந்து வடகொரியா பெற இருப்பதாகவும் அறிவித்துள்ளது.   வட கொரியாவும் ரஷ்யாவும் வட கொரிய துருப்புக்களை இடமாற்றம் செய்ததையும், குர்ஸ்க் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் தாக்குதலில் அவர்கள் வகித்த பங்கையும் பகிரங்கப்படுத்தியுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது