நார்வே 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை !
நார்வே அணி, எர்லிங் ஹாலண்டின் தாக்குதலால் 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பைக்கான தகுதி போட்டியில் இடம்பிடித்து ரசிகர்களை அதிர்ச்சி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத்தாலி அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய தீர்க்கமான வெற்றி நார்வே கால்பந்தின் வரலாற்றை மாற்றியிருக்கிறது.
மிக முக்கியமான போட்டியில் ஹாலண்ட் 78 மற்றும் 79வது நிமிடங்களில் தொடர்ந்து இரண்டு கோல்கள் அடித்து மேடையை முழுவதும் மின்னடித்தார். இந்த இரு கோல்களும் நார்வே அணியை 1998க்கு பின்னர் முதல் முறையாக உலகக் கோப்பை மேடைக்குக் கொண்டுசென்றன. வெற்றியின் உற்சாகத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கினர்.

அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு நார்வே அணி அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது. 25 வயதான ஹாலண்ட் இதுவரை தகுதிச் சுற்றில் 16 கோல்கள் அடித்து தனித்துவமான சாதனையையும் படைத்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
