முழுசா 30 நாள் கூட ஆகலை.. கணவர் இறந்த சோகம்.. இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மனைவி காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

 
கே விஸ்வநாத்

எத்தனை வயசானால் தான் என்ன.. அந்த அன்பு எப்போதும் மாறாதது தானே? இயக்குநர் கே.விஸ்வநாத் இறந்து முழுசாக 30 நாட்கள் கூட ஆகலை. அதே யோசனையில் இருந்த அவரின் மனைவி காசிநாதுனி ஜெயலட்சுமி நேற்று காலமானார். அவருக்கு வயது 88.

வயது  முதிர்வு காரணமாக காலமானார் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். உடல் உறுப்புகளுக்கு வயசு இருந்தாலும், மனசுக்கு வயசேது? மனசுக்குள், கணவரை இழந்து அவர் மருவிக் கொண்டிருந்தது மருத்துவர்களின் ஸ்டெத்டோஸ்கோப் கருவிகளில் எதிரொலிக்காது இல்லையா? இயக்குநர் கே.விஸ்வநாத் மனைவியின் மரணத்துக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1930ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர் இயக்குநர் கே.விஸ்வநாத். இவர், 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். ஒலிப்பதிவாளராக சினிமாவில் தடம் பதித்த இவர், 1975ல் முதன்முறையாக ‘ஆத்ம கவுரவம்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இதற்காக கே.விஸ்வநாத்திற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.

அதன் பின்னர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இயக்கினார். 50 படங்களுக்கு மேல் இயக்கிய விஸ்வநாத், தமிழில் கமல் நடிப்பில் வெளியான ‘குருதிப்புனல்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

Viswanath wife

அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், ரஜினிகாந்த் உடன் லிங்கா உள்ளிட்ட ஏராளனான படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார். அதேபோல் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் 5 தேசிய விருதுகள், ஆந்திர அரசின் ஏழு நந்திவிருதுகள், 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு இந்தி பிலிம்பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே.விஸ்வநாத் ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார்.

Viswanath wife

இந்நிலையில் அவருடைய மனைவி ஜெயலட்சுமி நேற்று மரணமடைந்தார். தெலுக்கு திரைத்துறையினரும், ரசிகர்கள் அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web