கையில் கடப்பாரை, மம்பட்டியுடன் களமிங்கிய அமைச்சர் எ.வ.வேலு!!

 
அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சர் எ.வ.வேலு கடந்த 2017ம் ஆண்டு தூய்மை அருணை என்ற மக்கள் இயக்கத்தை திருவண்ணாமலையில் தொடங்கினார். திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் தண்ணீர் பாட்டில், உணவு பொட்டலம், பிளாஸ்டிக் பைகள், என டன் கணக்கில் கழிவுப் பொருட்கள் குவிந்து வருகின்றன.

இதனை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மைப் படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எனினும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணி சவாலாக உள்ளது. இதனிடையே இது போன்ற பணிகளில் அரசுடன் மக்களையும் கை கோர்க்க வைக்கும் விதமாக தூய்மை அருணை என்ற மக்கள் இயக்கத்தை அமைச்சர் எ.வ.வேலு நடத்தி வருகிறார்.

அமைச்சர் எ.வ.வேலு

இதில், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வியாபாரிகள், என பலதரப்பட்டோரை உள்ளனர். இந்த அமைப்புக்கு மஞ்சள் டீ ஷர்ட், கருப்பு பேண்ட், என தனி சீருடையும் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

இதனிடையே கடந்த ஒரு மாதமாக ஈரோட்டில் முகாமிட்டு இடைத்தேர்தல் பணியில் படு மும்முரமாக ஈடுபட்டு வந்த அமைச்சர் எவ வேலு, அதைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக சென்னையில் முகாமிட்டு ஸ்டாலின் பிறந்தநாள், துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்கள் என பிசியாக இருந்து வந்தார்.

அமைச்சர் எ.வ.வேலு

இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று தனது டீமுடன் கையில் கடப்பாரை, அரிவாள், மம்பட்டி, என தூய்மைப் பணிக்கான உபகரணங்களுடன் களமிறங்கி கவனம் ஈர்த்திருக்கிறார். இவருடன் இவரது மகனும் இந்த தூய்மைப் பணியில் பங்கெடுத்தார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web