பிரபல கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர் நந்தலாலா காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!

 
நந்தலாலா
கவிஞரும் பட்டிமன்றப் பேச்சாளருமான நந்தலாலா (69) உடல்நலக் குறைவு காரணமாக  இன்று பெங்களூருவில் மருத்துவமனையில் காலமானார்.

இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் நந்தலாலா சிகிச்சைப் பலனின்றி காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நந்தலாலா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநில துணைத் தலைவராக இருந்த கவிஞர் நந்தலாலா, முன்னணி பட்டிமன்றப் பேச்சாளாராக திகழ்ந்தார். 

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார்.

நந்தலாலா

இவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட, தமுஎகச நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், முற்போக்கு எழுத்தாளர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நந்தலாலாவின் இறுதிச் சடங்குகள் திருச்சியில் நாளை மார்ச் 5ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web