“இப்போ... கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்...” - பிரபல நடிகை வருத்தம்!

 
காதலரை பிரிஞ்சுட்டேன்…!! நடிகை சுஷ்மிதா சென் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் !!

இப்போ கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன் என்று பிரபல நடிகை சுஷ்மிதா சென் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

தமிழில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக 'ரட்சகன்' படத்தின் மூலம்  கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை சுஷ்மிதா சென். அழகிப் போட்டியில் வென்று மிஸ் அழகியாகவும் வலம் வந்தவர். அதன் பின்னர் இயக்குநர் ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் சக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற செய்ததில் சுஷ்மிதாவுக்கு பெரும் பங்கு உண்டு. தமிழில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்தாலும், இந்தியில் அதிக படங்களில் நடித்து பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது 49 வயதாகும் நடிகை சுஷ்மிதா சென், இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

சுஷ்மிதா சென்

திருமணம் செய்துக் கொள்ளாமலேயே இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் சுஷ்மிதா, ரோஹ்மன் என்பவருடன் காதல் மலர்ந்த நிலையில் டேட்டிங்கில் இருந்து வந்தார். அதன் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சுஷ்மிதா சென் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர், "எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

சுஷ்மிதா சென்

அதற்கு பதில் அளித்த சுஷ்மிதா சென், "எனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால் பொருத்தமான மாப்பிள்ளை அமைவது முக்கியம். திருமணம் என்பது சாதாரண நிகழ்வாக இருக்கக்கூடாது. இரு இதயங்கள் காதலோடு இணையக்கூடியதாக இருக்க வேண்டும். அது போன்ற உணர்வு எனது இதயத்தில் உருவாகும் போது திருமணம் செய்து கொள்வேன்'' என தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web