அதிர்ச்சி!! இனி ஒரு அட்டைக்கு ஒரு பால் கவர் தான்!! ஆவின் நிர்வாகம் அதிரடி!!

 
ஆவின் பால்

தமிழக அரசு மூலம் ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தி செய்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. சென்னையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு  இதற்காக மாதாந்திர பால் அட்டைகள் மூலம் பால் பாகெட்டுகள் விநியோகம்  செய்யப்பட்டு வருகின்றன. தற்போது போலி மாதாந்திர பால் அட்டைகள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக  தொடர் புகார்கள் அதிகரித்து வருகின்றன

ஆவின்

அவற்றை அடையாளம் கண்டு அகற்றும் பணியில் ஆவின் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த  ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆவின் மாதாந்திர பால் அட்டைகளை புதுப்பிக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆவின் ஆதார்

அதன்படி வாடிக்கையாளர்கள் குடும்ப அட்டை அல்லது வீட்டு வாடகை ஒப்பந்தம் இவைகளின் ஏதாவது ஒன்றின் நகலை ஆவின் நிர்வாகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.அதன் பிறகு மாதந்திர பால் அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளலாம் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு குடும்ப பால் அட்டைக்கு தினமும் ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகள் மட்டுமே விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web