இனி 'கெகியஸ் மாக்சிமஸ்'... தனது எக்ஸ் பக்கத்தில் பெயரை மாற்றினார் எலான் மஸ்க்!

 
எலான் மஸ்க்


தனது எக்ஸ் பக்கத்தில் ‘கெகியஸ் மாக்சிமஸ்’ என்று பெயரை மாற்றி இருக்கிறார் எலான் மஸ்க். 

ட்விட்டர் என்று உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைப்பின்னலாக இருந்ததை கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திடீரென உலகின் பெரும் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கியதும், ‘எக்ஸ்’ என பெயர் மாற்றினார். 

இப்போதும் பழைய பழக்கத்தில் பலரும் ட்விட்டர் என்றே குறிப்பிட்டு வருகின்றனர். பெயரை மாற்றியதும் ட்விட்டரில்... ஸாரி... ஸாரி.. எக்ஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டு, இணையதளத்தின் கட்டமைப்பில் பல மாற்றங்களைச் செய்தார். 

இந்நிலையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் ஐடியின் பெயரை 'கெகியஸ் மாக்சிமஸ்' என மாற்றியுள்ளார்.

எலான் மஸ்க்

மேலும், தனது அடையாள அட்டையின் முகப்புப் பக்கத்தையும் மாற்றியுள்ளார். பெபே தவளை மீம் புகைப்படத்தை முகப்புப் பக்கமாக வைத்துள்ளார். எலான் மஸ்க் ஏன் இந்த மாற்றத்தை செய்தார் என்பது தெரியவில்லை. அதே நேரத்தில், இந்த மாற்றத்திற்குப் பிறகு கெகியஸ் எனப்படும் மீம் கரன்சியின் மதிப்பு 500% அதிகரித்துள்ளது. இணையத்தில் வைரலான மீம்ஸ் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மீம் நாணயங்கள் ஒரு வகையான கிரிப்டோகரன்சி ஆகும். 2000 ஆம் ஆண்டு வெளியான கிளாடியேட்டர் படத்தின் ஹீரோவின் பெயர் மாக்சிமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!! 

From around the web