மாஸ் வீடியோ... விமானத்தோட போட்டி போட்டு இனி காரும் வானத்தில் பறக்கும்… !

சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக பல்வேறு புதுப்புது யுக்திகள், தொழில்நுட்பங்கள்மூலம் தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை Alef Aeronautics நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அமெரிக்காவைச் சார்ந்த இந்நிறுவனம் ரூ 2.5 கோடி மதிப்புள்ள காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
⚡️The first ever electric car flight was made by the American company Alef Aeronautics👀
— 🌚 MatTrang 🌝 (@MatTrang911) February 21, 2025
The video shows the Model A electric car driving along the road and then flying over another vehicle. The car is reportedly capable of driving 354 km and flying 177 km on a single charge.… pic.twitter.com/MrzHzzkwjK
இந்த கார் சாதாரணமாக ரோட்டில் செல்லும் காரை போல ரோட்டில் ஓடும், தேவையான நேரத்தில் ஆகாயத்தில் பறக்கவும் முடியும். இந்த காரின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள ப்ரொபெல்லர் வடிவமைப்பு இதற்கு உதவி செய்கிறது. அந்நிறுவனத்தின் முதல் டெஸ்ட் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டிஸ்ட்ரிபியூட் எலக்ட்ரிக் ப்ரொபைல்சன் என்னும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த கார் நிலத்திலிருந்து உயர பறக்கிறது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், சமூக ஊடகப் பயனர்கள் உற்சாகமாகவும், சந்தேகத்துடனும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது Alef மாடல் ஏ என்னும் 2 இருக்கை கொண்ட பறக்கும் காரை, கமர்சியலாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதன் விமான பயண தூரம் 110 மைல் மற்றும் சாலையில் ஓடும் தூரம் 200 மைல் என அறிவித்துள்ளது. இதில் ஆட்டோபைலட் பறக்கும் வசதியும் இருக்கும். இதுவரை 3,300 பேர் முன்பதிவு செய்துள்ளதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். 2035க்குள், நான்கு இருக்கைகளுடன் பறக்கும் Model Z காரை வெளியிடும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் விமான தூரம் 200 மைல், சாலை ஓட்டத் தூரம் 400 மைல் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!