நிர்வாண வீடியோ... ரூ.10 லட்சம் பறிக்க முயன்ற 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கைது!
கேரளாவில் ஆன்லைன் செயலி மூலம் வலைய வீசி, இளைஞரை வீட்டிற்கு வரவழைத்து மிரட்டிய கும்பல், போலீசாரின் சாதுர்யமான நடவடிக்கையால் சிக்கியுள்ளது.
கேரள மாநிலம், காஞ்சங்காட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமி, மொபைல் செயலி மூலம் கண்ணூர் சக்கரக்கல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகியுள்ளார்.சிறுமியின் பேச்சில் மயங்கிய அந்த இளைஞர், அவரைச் சந்திக்கக் காஞ்சங்காட்டில் உள்ள ஒரு வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மறைந்திருந்த இப்ராஹிம், அப்துல் கலாம் மற்றும் மைமுனா ஆகிய மூவர் சிறுமியுடன் சேர்ந்து கொண்டு இளைஞரை மிரட்டியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர்.

இந்த ஆதாரங்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி, முதலில் ரூ.10 லட்சம் கேட்டுள்ளனர். அவர் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதும், அதற்கு இணையான தங்கம் அல்லது இறுதியாக ரூ.6 லட்சம் தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
பணத்தைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட இளைஞர், அந்த கும்பலைத் தனது ஊரான சக்கரக்கல்லுக்கு வரவழைத்துள்ளார். இது குறித்து அவர் ஏற்கனவே போலீசாருக்குத் தகவல் கொடுத்திருந்தார். சக்கரக்கல் சி.ஐ. எம்.பி. ஷாஜி தலைமையிலான போலீசார் ரகசியமாகக் கண்காணித்து, பணம் வாங்க வந்த இப்ராஹிம் ஷாஜ்மல் அர்ஷத் (28), கே.கே. அப்துல் கலாம் (52), மைமுனா (51) மற்றும் 17 வயது சிறுமியை மடக்கிப் பிடித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
