பெண் மருத்துவர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்த நர்ஸ்!

 
வீடியோ
 

ஆந்திராவின் குண்டூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண் நர்சாக சேர்ந்த வெங்கடசாயி, அறுவைச் சிகிச்சை அறையில் பெண் டாக்டர்கள் ஆடை மாற்றும் தருணங்களை மறைமுகமாக செல்போனில் பதிவு செய்ததாக பரபரப்பு எழுந்துள்ளது. மேலும் மருத்துவ மாணவிகள் உடை மாற்றுவதைப் பற்றிய பல வீடியோக்களும் ரகசியமாக எடுத்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று வெங்கடசாயியை கைது செய்து விசாரணை தொடங்கினர். அவர் பயன்படுத்திய மொபைல் போனும் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்கு முன்பே பெண் டாக்டர்கள் மற்றும் மாணவிகள் இணைந்து அந்த செல்போனை கைப்பற்றி, அதிலிருந்த 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் குற்றச்சாட்டின் உண்மைதன்மையை உறுதிப்படுத்த, நீக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோக்களை மீட்டெடுக்கும் நோக்கில், வெங்கடசாயியின் மொபைல் போன் ஃபொரென்சிக் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மருத்துவம் பயிலும் மாணவியர் மத்தியில் அதிக பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!