நடத்தையில் சந்தேகம்... நர்ஸ் கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை!

 
நர்ஸ் நர்ஸ்

கடலூர் மாவட்டம் வடலூரில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற நர்ஸ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அவரது கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வாலாஜாபேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி (34), அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வந்தார். வடலூரைச் சேர்ந்த கார் டிரைவர் பிரேம் ஆனந்த் (44) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்த பிரேம் ஆனந்த், 2015-ம் ஆண்டு ஊர் திரும்பிய பின் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

தற்கொலை

கடந்த 25.1.2016 அன்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய தனலட்சுமியுடன், பிரேம் ஆனந்த் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தில் தனலட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அவர், கொலையை மறைக்க உடலைத் தூக்கில் தொங்கவிட்டுத் தற்கொலை என நாடகமாடினார். இருப்பினும், வடலூர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தனலட்சுமி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பிரேம் ஆனந்தைக் கைது செய்த போலீசார், கடலூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்தனர்.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகிளா நீதிமன்ற நீதிபதி குலசேகரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் வளர்மதி ஜெயச்சந்திரன் ஆஜராகி சாட்சிகளை முன்வைத்தார். அனைத்துச் சாட்சிகளிடமும் விசாரணை முடிந்த நிலையில் நேற்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது: பிரேம் ஆனந்த் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 2,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சந்தேகத்தால் ஒரு குடும்பம் சிதைந்து, ஒரு பெண் உயிரிழந்த நிலையில், கொலையாளிக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தண்டனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!