வந்தே பாரத் ரயில் மோதி நர்சிங் மாணவி இளைஞர் மரணம்... தற்கொலையா?
பெங்களூரு சிக்கபனாவாரா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இளம்பெண் மற்றும் வாலிபர் பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் யஷ்வந்தபுரம் ரயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், பெலகாவியில் இருந்து பெங்களூரு வந்த வந்தே பாரத் ரயில் மோதி இருவரும் பலியானது தெரியவந்தது. உடல்கள் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
உயிரிழந்தவர்கள் கேரளாவின் பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ஜஸ்டின் ஜோசப் (20) மற்றும் ஸ்டெர்லின் எலிசா சாஜி (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் நண்பர்கள் என்பதும், சிக்கபனாவாரா பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, பெங்களூருவிலுள்ள கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு பயின்று வந்ததும் தெரியவந்துள்ளது. முன்தினம் மதியம் இருவரும் வெளியில் சென்ற பின்னர் திரும்பவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தார்களா? அல்லது பிற காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வந்தே பாரத் ரயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் பரிசோதிக்கப்படுகின்றன. அவை கிடைத்ததும் மரணத்தின் உண்மை காரணம் வெளிவரும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
