இன்ஸ்டாவால் விபரீதம்... கழிவறையில் பெற்ற குழந்தையை வாளியில் வீசிய நர்சிங் மாணவி!
கன்னியாகுமரி மாவட்டம் கரம்பவிளை பகுதியில் இன்ஸ்டாகிராம் காதலால் நேர்ந்த ஒரு கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உறைய வைத்துள்ளது. நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் பயின்று வந்த 20 வயது மாணவி ரெஜினா, திருநெல்வேலியைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலில் இருந்து வந்துள்ளார். பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு காதலனுடன் ஊர் சுற்றிய மாணவி, எதிர்பாராத விதமாக கர்ப்பமடைந்த நிலையில் அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் ஒன்பது மாதங்களாக மறைத்து வந்துள்ளார்.

நர்சிங் மாணவி என்பதால் தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களை யாருக்கும் தெரியாத வண்ணம் மிக சாதுர்யமாக மறைத்து வந்த ரெஜினாவுக்கு, சில நாட்களுக்கு முன்பு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. யாரிடமும் உதவி கேட்க பயந்துபோன அவர், தனது வீட்டின் கழிவறையிலேயே ரகசியமாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். இந்த விபரீதத்தை தனது காதலன் முகேஷிடம் போனில் தெரிவித்தபோது, குழந்தையை உடனே எங்காவது வீசி எறியுமாறு அவர் வற்புறுத்தியதாக போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலனின் தூண்டுதலால் பெற்ற குழந்தை என்றும் பாராமல், அந்த பச்சிளம் ஜீவனை ஒரு பையில் வைத்து வாளிக்குள் அடைத்து அருகில் உள்ள கோயில் பின்புறம் வீசிச் சென்றுள்ளார் அந்த கல்நெஞ்சக்கார தாய். அந்த வழியாகச் சென்றவர் சந்தேகத்தின் பேரில் வாளியைத் திறந்து பார்த்தபோது, குழந்தை சடலமாகக் கிடப்பதைக் கண்டு அலறியடித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். சிசிடிவி காட்சிகளை வைத்து ரெஜினா மற்றும் அவரது காதலன் முகேஷை கைது செய்துள்ள போலீசார், ஒரு பிஞ்சு உயிரை பலிவாங்கிய இந்த கொடூரக் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
