இன்று முதல் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இதனால் மாநிலம் முழுவதும் சத்துணவு திட்டப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் நாளைய தலைமுறையான பள்ளி மாணவர்களின் பசி போக்கி, ஊட்டச்சத்து வழங்கும் மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான சத்துணவு ஊழியர்கள், பணிப் பாதுகாப்பும் முறையான ஓய்வூதியமும் கோரி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.
— TVK IT Wing Official (@TVKHQITWingOffl) January 19, 2026
"சத்துணவு மற்றும் அங்கன்வாடி… pic.twitter.com/txLtsUi8oe
இந்த நிலையில், சத்துணவு ஊழியர் சங்கங்கள் தலைமைச் செயலகத்திற்கு அழைக்கப்பட்டன. சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், இயக்குனர் சங்கீதா, இணை இயக்குனர் ஜெயலட்சுமி ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அரசு தரப்பில் தெளிவான உறுதி அளிக்கப்படாததால், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்க உள்ளதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டம் மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
