ஆபாச லூட்டி பாதிரியார் கைது.. 50 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. அடுத்தடுத்து வெளிவரும் பூகம்பம்!

 
மினி அஜிதா

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, விளவங்கோடு பாத்திமா நகர் குடல்வால்விளையை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக் ஆன்றோ (29). அவர் தான் பணியாற்றும் தேவாலயத்துக்கு வந்த இளம்பெண்களுடன் பழகி அவர்களுடன் வாட்ஸ்அப் சாட்டிங் செய்து பின்னர் தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.

அவர்களுடன் நெருக்கமாக இருந்தும், ஆபாச வீடியோக்கள் எடுத்து, அதை காட்டியே மிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. இவரால் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், சிறுமிகள் பாலியல் தொல்லையால் அவதிப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்த செல்போனில் அனைத்தும் வீடியோ, புகைப்படம் எடுத்து வைத்திருந்ததும் அம்பலமானது.

மினி அஜிதா

அது மட்டுமின்றி பாதிரியாரின் ஆபாச படங்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் இருந்தவாறு செல்போன் வீடியோ காலில் உரையாடல், முத்தமழை பொழிவது என பல்வேறு காட்சிகள் உள்ளன. ஆபாசமாக வாட்ஸ் அப் சாட்டிங் செய்த பதிவுகளும் வெளியாகி உள்ளன. 

முன்னதாக மினி அஜிதா என்ற பெண் காவல்துறையில் புகார் அளித்தார். பாதிரியாரின் லீலைகளை தட்டிக்கேட்டதால் தனது மகனை பாதிரியார் கும்பல் தாக்கியது. மேலும் அவர்கொடுத்த புகாரில் காவல்துறை தனது மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. எனவே விசாரணை நடத்தி பாதிரியார் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தார்.

மினி அஜிதா

இந்த நிலையில், பாதிரியாரால் பாதிக்கப்பட்ட நர்சிங் மாணவி ஒருவர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடத் தொடங்கினர். இது தெரிந்து பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவானார். தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில், தனிப்படை போலீசால் இன்று கைது செய்யப்பட்டார். வெளியூர் தப்பி செல்ல முயன்ற பாதிரியாரை நாகர்கோவில் பால்பண்ணை பகுதியில் வைத்து போலீஸ் கைது செய்தது.

இவரிடம் விசாரணை நடத்தும்போது அடுத்தடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web