அதிர்ச்சி !! தொண்டையில் சிக்கிக் கொண்ட ஆக்டோபஸ்!!

 
ஆக்டோபஸ்

மனிதன் பொதுவாக மாமிச உண்ணி.  முட்டை, கோழி, ஆடு தொடங்கி மீன், சுறா என நடப்பது முதல் பறப்பன வரை அனைத்தையும் அடித்து சுவைத்து சாப்பிடுபவன். ஆனால் உணவே சில நேரங்களில் ஆபத்தை விளைவிக்க கூடியதாக மாறிவிடுகிறது.  பல சமயங்களில் சுவைக்காகவும் சில சமயங்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்காகவும் இறைச்சி உணவுகளை சாப்பிடுகின்றனர். ஆனால் சில நேரங்களில் விலங்குகளை சாப்பிடுவதும் ஆராயாமல் சாப்பிடுவது தவறாகிவிடும். அப்படி தான் சிங்கப்பூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த வகையில்   55 வயது நபர் ஒருவர் ஆக்டோபஸை விழுங்கியதால், அது அவரின் உயிருக்கே ஆபத்தாக மாறியுள்ளது.   எட்டு கால்கள் கொண்ட கடல் உயிரினமான ஆக்டோபஸ், அடங்கிய உணவை தெரியாமல் சாப்பிட்டு விட்டார்.

ஆக்டோபஸ்

அதன் பிறகு   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஆக்டோபஸை விழுங்கிய உடனேயே, அந்த நபர் வாந்தி எடுக்கத் தொடங்கினான்.   மேலும் அவரது உடலில் நீர்ச்சத்து குறைந்து கொண்டே சென்றதால் உடல்நிலை மோசமடைந்தது.  இறுதியில், அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.நோயாளியின் உணவுக்குழாய், வாயை வயிற்றுடன் இணைக்கும் தசைக் குழாயை மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். இரைப்பை உணவுக்குழாய் சந்திப்பு எனப்படும் உணவுக்குழாயில் ஆக்டோபஸ் சிக்கிக் கொண்டிருப்பது தெளிவாகத்  தெரிகிறது.   ஆக்டோபஸை அகற்றுவதற்கான ஆரம்பகட்ட  முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற்றன. இருந்தபோதிலும், இறுதியில் அதை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்தனர். இதன் பிறகு   நோயாளி விரைவாக குணமடைந்து 2 நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்டோபஸ்


டான் டோக் செங் மருத்துவமனையின் மருத்துவக் குழு, தாங்கள் மருத்துவமனையில் பணிபுரியும் போது அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் இந்த  உணவு அடைப்பு என்கிறது.  இந்த வகையான  கேஸ்களுக்கு  எண்டோஸ்கோபிக் சிகிச்சை தேவைப்படுகிறது, அதே சமயம் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளது.   உலகின் முன்னணி மருத்துவ இதழ்களில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆக்டோபஸ் தொண்டைக்குள் சிக்கிக்கொள்ளும் சம்பவம் நடைபெறுவது இது முதன்முறையல்ல எனவும் இதற்கு முன் 2016ல்  அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் 2 வயது சிறுவனின் தொண்டையில் ஆக்டோபஸ் சிக்கிக்கொண்டதால் அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்  என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web