வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பொதுவெளியில் நிர்வாணமாக நின்ற அதிகாரி!
கேரளாவின் மலப்புரம் மாவட்டம், தவனூர் மண்டலத்தில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒருவர், படிவப் பதிவில் இருந்தபோதே திடீரென ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றுவிட்டார். அருகில் நின்ற பெண்கள் உட்பட பொதுமக்கள் அதிர்ச்சியில் அலறியடித்த நிலையில், அங்கு குழப்பம் பரவியது.

இந்த சம்பவம் நடந்த நாள் கடந்த வாரமே என்றாலும், அதற்கான வீடியோ காட்சி நேற்று டிவி செய்தி ஊடகங்களில் வெளிவர, விவகாரம் காட்டுத்தீ போல் பரவியது. சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டதால், பொதுமக்கள் எதிர்ப்பு அதிர்வெண் அதிகரித்தது. "ஆதார ஆவணப் பணிக்காக சென்றோம்… இதைத் தான் பார்க்க வேண்டியதா?" என மக்கள் கேள்வி எழுப்பினர்.

சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுவெளியில் அநாகரிகமாக நடந்துகொண்டதற்காக அந்த அலுவலர் உடனடியாக கடமையிலிருந்து நீக்கப்பட்டார். மேலும், இவரிடம் இருந்து விளக்கமேற்கொள்ள நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வு தேர்தல் பணியில் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
