லைசென்ஸ் கொடுத்த அதிகாரியே லஞ்ச வேட்டை... கையும் களவுமாக தட்டித் தூக்கிய காவல்துறை!

 
லைசன்ஸ்
 

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வரும் கணேசனிடம், வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. புதிதாக லைசென்ஸ் பெற்றதையடுத்து, அலுவலக செலவுக்காக ரூ.15 ஆயிரம் தர வேண்டும் என அவர் தொடர்ந்து வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

மகிழ்ச்சி! அரசு அலுவலகங்களில் லஞ்சம் தர தேவையில்லை!

பணம் தர இயலாது என கணேசன் கூறியதும், லஞ்சத் தொகையை ரூ.10 ஆயிரமாகவும், பின்னர் ரூ.8 ஆயிரமாகவும் குறைத்து கேட்டுள்ளார். இன்று மாலை 3 மணிக்கு அலுவலகத்தில் வந்து பணம் தருமாறு தொலைபேசியில் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

லஞ்சம் பணம் ஊழல்

லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் புகார் அளித்தார். அவர்களது திட்டமிடலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை வாங்கியபோது, கேசவராமன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். அவரிடம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!