WWE-ல் இருந்து அதிகாரப்பூர்வ ஓய்வு... கடைசிப் போட்டியில் தோல்வியைத் தழுவினார் '90-ஸ் கிட்ஸின் ஹீரோ' ஜான் சீனா!
WWE மல்யுத்தப் போட்டிகளில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்று, உலகெங்கிலும் உள்ள குறிப்பாக '90-ஸ் கிட்ஸ்' ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த சூப்பர்ஸ்டார் ஜான் சீனா, தனது கடைசிப் போட்டியில் தோல்வியைத் தழுவிய நிலையில், மல்யுத்தப் போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு தான் WWE போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஜான் சீனா அறிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது அவர் தனது கடைசிப் போட்டியில் கன்தர் (Gunther) என்பவரை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் எதிர்பாராதவிதமாக ஜான் சீனா 'Tap out' முறையில் தோல்வியடைந்தார். இதன்மூலம், உலக மல்யுத்த அரங்கை ஆளும் ஹீரோக்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஜான் சீனா, தோல்வியுடன் தனது புகழ்பெற்ற WWE மல்யுத்த வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஜான் சீனா தனது களத்திற்குள் நுழையும் தனித்துவமான ஸ்டைலால் மிகவும் பிரபலம் ஆனவர். மல்யுத்தப் போட்டிகளில் மட்டுமன்றி, அவர் பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் நடந்த ஆஸ்கார் விழாவில், சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிக்க ஆடை இல்லாமல் மேடையில் தோன்றியது பெரும் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. ஓய்வுக்குப் பிறகு அவர் சினிமாவில் முழு கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
