பொங்கல் ரேஸிலிருந்து அதிகாரப்பூர்வமாக அவுட்... 'ஜனநாயகன்' பட வழக்கு ஜன.19ல் விசாரணை!
நடிகர் விஜய்யின் 'தளபதி 69' திரைப்படமான 'ஜனநாயகன்' இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திரைப்படத் தணிக்கை வாரியத்துடனான சட்டப் போராட்டத்தால், இப்படம் பொங்கல் ரேசிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரித் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி 'U/A' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதனை எதிர்த்துத் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தபோது, உயர்நீதிமன்ற அமர்வு அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையை எதிர்த்துத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரப்பட்ட போதிலும், உச்சநீதிமன்றத்தின் உத்தேசப் பட்டியலில் இந்த வழக்கு வரும் ஜனவரி 19-ஆம் தேதி தான் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை ஜனவரி 14 முதல் 17-க்குள் முடிந்துவிடும் என்பதால், ஜனவரி 19-ல் விசாரணை நடப்பது படத்திற்குப் பொங்கல் ரிலீஸ் வாய்ப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. திரைப்படத் தணிக்கை வாரியம் பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய அமைச்சகத்தின் கீழ் வருவதால், அரசியல் உள்நோக்கத்துடனேயே விஜய்யின் படத்திற்கு முட்டுக்கட்டை போடப்படுவதாகத் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். "ரிலீஸ் ஆகுற அன்னைக்குத்தான் எங்களுக்குப் பொங்கல்" என அவர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
