பரபரப்பு... தவெக அலுவலகத்தை ஜேசிபி மூலம் இடித்து தள்ளிய அதிகாரிகள்!

 
திருவள்ளூர்

 
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கை காரணமாக தினமும் காலை மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நோயாளிகள் போக்குவரத்து நெரிசல் மிகுதியால் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.  

திருவள்ளூர்

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த  சாலை நடைபாதைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகளை அகற்றுமாறு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்துள்ளனர்.இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருமழிசை  - ஊத்துக்கோட்டை மாநில நெடுஞ்சாலை வழித்தடத்தில்  இருந்த ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன.

திருவள்ளூர்

அந்த வகையில்   திருவள்ளூர் பகுதியில் ஆக்கிரமித்து  கட்டப்பட்டுள்ள கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலமாக அகற்றிவிட்டனர். அந்த பகுதியில் பத்தியால் பேட்டையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில்  தவெக கட்சியின் கட்டிடம் இருந்தடு.  திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தின் இளைஞர் அணி நிர்வாகி மணிகண்டனால் கட்டப்பட்ட அலுவலகத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திர உதவியுடன் இடித்து தள்ளினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web