அட கொடுமையே... மனைவி தங்கியிருந்த வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - கணவன் செய்த பகீர் காரியம்!
சென்னை மதுரவாயல் பகுதியில் பிரிந்து சென்ற மனைவியின் வீட்டின் மீது கணவன் நாட்டு வெடிகுண்டுகளை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும், மதுரவாயலைச் சேர்ந்த வர்ஷா என்பவரும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 10 மாதங்களாக வர்ஷா தனது கணவரைப் பிரிந்து மதுரவாயலில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு வர்ஷாவைச் சந்திக்க வந்த சக்திவேல், அவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் வர்ஷா லேசான காயமடைந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வர்ஷாவின் சித்தப்பா ரமேஷ் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, சக்திவேல் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை வர்ஷாவின் வீட்டை நோக்கி சக்திவேல் வீசினார்.
முதல் குண்டு வீசப்பட்டபோது ரமேஷ் அதிலிருந்து நூலிழையில் உயிர் தப்பினார். தொடர்ந்து இரண்டாவது குண்டையும் வீசிவிட்டு சக்திவேல் அங்கிருந்து தப்பியோடினார். அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்த சத்தத்தைக் கேட்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் திரண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த மதுரவாயல் போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சிதறிக் கிடந்த வெடிகுண்டு துகள்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சக்திவேல் மற்றும் அவருக்கு உதவிய நண்பரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
