அடக்கடவுளே... இதென்ன சர்ச்சை? தனுஷ் விவாகரத்துக்கு இவர் தான் காரணமா?

 
தனுஷ் செளந்தர்யா

வதந்திக்கு றெக்கைக் கட்டி விட்டது போல கோலிவுட் முழுக்க திடீரென மீண்டும் நடிகர் தனுஷ் விவாகரத்து பிரச்னை குறித்து செய்திகள் வலம் வருகின்றன. அதே சமயம் இதை வதந்தி என்று ஒதுக்கவும் முடியாமல் பெரிய வீட்டு மனிதர்கள் முணுமுணுக்கிறார்கள். நெருப்பில்லாமலா புகையும் என்கிறார்கள் கோலிவுட் ஆசாமிகள்.

தனுஷ், தான் மூன்றாவதாக இயக்க இருக்கும் படம் பற்றி வெளியிட்டிருந்த அறிவிப்பு தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 'பவர் பாண்டி’ படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷ் இயக்குநராகத் தனது ஐம்பதாவது படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கடுத்து, அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு வந்தது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்?’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அவரது அக்கா மகன் பவிஷ் கதாநாயகனாக நடிக்க, அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியானது. ‘வழக்கமான காதல் கதைதான் இது’ என இது பற்றி ட்விட் செய்துள்ளார் தனுஷ். தற்போது இந்தப் படம் குறித்துதான் சர்ச்சை எழுந்துள்ளது.

’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ குழுவுடன்...

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் தனுஷ் திரைக்கதை வசனம் எழுத, சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்க இருந்தார். இதுகுறித்து சௌந்தர்யா ரஜினிகாந்த் அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில்கூட, ”சில வருடங்களுக்கு முன்னதாக தனுஷ் திரைக்கதை எழுத அந்த படத்தை நான் இயக்கவிருந்தேன். ஆனால், அதன் பிறகு அந்த திரைப்படம் கைவிடப்பட்டது. அதனால், தற்போது தனுஷ் அவர்களே அந்த திரைப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி அந்த படத்தை இயக்கவிருக்கிறார்” என்று கூறியிருந்தார்.

தனுஷ் செளந்தர்யா

சௌந்தர்யாவுடன் இணைந்து தனுஷ் பணி செய்யக்கூடாது என்று சொல்லித்தான், முதலில் ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் இடையே சண்டை தொடங்கி இருக்கிறது. இந்த விவாதம் பூதாகரமான நிலையில்தான் இருவரும் பிரிந்ததாகவும் ஒருதகவல் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web