அட கொடுமையே... 100க்கும் மேற்பட்ட மாணவிகளின் வீடியோக்கள்... புது மணப்பெண்களையும் விட்டு வைக்கலை... தலைமறைவான பாதிரியார்!

 
பெனடிக் ஆன்றோ

கத்தியில்லை... ரத்தமில்லை... ஆனா உசுர மட்டும் அப்படியே உருவி எடுத்துட்டியே என்று நடிகர் கமலஹாசனிடம், ‘வசூல்ராஜா” படத்தில் நாகேஷ் ஒரு டயலாக் பேசுவார். கன்னியாகுமரி பாதிரியார், பொள்ளாச்சி சம்பவங்களை எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடும் படியாக தனியொருவராக அப்படி தான் பல இளம்பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்திருக்கிறார். இயேசுவின் பெயரால் என்று இவர் நடத்திய லீலைகளும், அப்பாவி பெண்களின் கற்பை சூறையாடிய விதத்தையும் அதிர்ச்சியோடும், கலவரத்தோடும் பார்க்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.

அவரது லேப்-டாப், அவரிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலையில், லேப்-டாப்பில் இருந்து வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்கள். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளின் ஆபாச வீடியோக்களை லேப்-டாப்பில் பார்த்து அதிர்ந்து போயுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பெனெடிக் ஆண்டோ என்ற 27 வயதான பாதிரியார் பணியாற்றி வந்தார். அவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்தார். முதலில் அன்பாக பேசிய அவர் நாட்கள் செல்ல செல்ல இரட்டை அர்த்தத்தில் பேசி பெண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார். தன்னிடம் விழுந்த பெண்களிடம் வாட்ஸ்-அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக பேச துவங்கியுள்ளார். 

பெனடிக்

ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட பெண்களின் ஆடைகளை கழற்றும்படி கூறி நிர்வாண நிலையில் வீடியோவும் பதிவு செய்து வைத்துக் கொண்டார். பின்னர் அந்த ஆபாச வீடியோவை வைத்து மிரட்டி பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார்கள் எழுந்துள்ளன. பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும், தனக்கு நடந்ததை வெளியே கூறினால் அவமானம் ஆகிவிடும் என்பதற்காக அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அவர் இளம்பெண்களுடன் செய்த ஆபாச பேச்சு, வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இளம்பெண்களுடன் நிர்வாண நிலையில் அவர் பேசிய காட்சிகள், உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் என 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களும், வி இடியோக்களுமாக வெளியாகி உள்ளன. 

ஆபாச வீடியோக்கள் வெளியான நிலையில் பாதிரியார் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் இருந்து தன்னுடைய பணியை ராஜினாமா செய்து விட்டதாகவும் சமூகவலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. இதற்கிடையே சம்பந்தப்பட்ட கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்திற்கு வேறு பாதிரியார் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிரியார் மீதான பிடி இறுகுவதால் போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிகிறது.

இதற்கிடையே கடந்த 13-ந் தேதி காட்டாத்துறை அருகே உள்ள ஆலந்தட்டுவிளையை சேர்ந்த ஒரு பெண் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், பாதிரியார் இளம்பெண்களுக்கும், மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றார். அதோடு பாதிரியார் தொடர்பான ஆபாச வீடியோக்களையும், பதிவுகளையும் ஒப்படைப்பதாக அவர் கூறினார். ஆனால் அதற்குள் அனைத்து வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாதிரியார் செல்போன் மற்றும் லேப்-டாப்பில் பல்வேறு ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொண்டால் மட்டுமே உண்மை தெரிய வரும். பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட பாதிரியார் ஆபாச வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வரும் சூழலில் சம்பந்தப்பட்ட மதபோதகர் அரசியல் கட்சி தலைவர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படமும் வைரலாக பரவி வருகிறது.

Kanniyakumari

இந்த பரபரப்புக்கு இடையே பாதிரியார் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘நான் பாதிரியார் பணியாற்றிய ஆலயத்துக்கு சென்றேன். முதலில் சாதாரணமாக பேசி ஆசி வழங்கினார். பின்னர் தவறான முறையில் என்னை தொட்டு பேச தொடங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட மத வழிபாட்டு தல பங்கை விட்டு மாறி நாங்கள் சென்று விட்டோம். எனினும் அவர் என் தாயாரிடம் எனது செல்போன் நம்பரை வாங்கி பேசினார். ஒரு கட்டத்தில் செய்வதறியாது நானும் பேசினேன். ஆனால் பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் பேசினார். வீடியோ கால் செய்தும் தொந்தரவு செய்தார். என்னை மட்டுமல்லாது பல பெண்களிடம் இவ்வாறாக அவர் நடந்து கொள்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டு எச்சரித்தேன். நான் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறினேன். அதற்கு என்னை மிரட்டினார். எனவே இது தொடர்பாக மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web