அட கொடுமையே... பிரவசத்தில் பெண்குழந்தை... ஐசியுவில் போட்டுவிட்டு எஸ்கேப்பான கணவன் - மனைவி!

நிறைமாத கர்ப்பிணி என்பதால் பிரசவத்திற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரசவத்தில் பெண் குழந்தைப் பிறந்ததால் குழந்தையை அப்படியே ஐசியு வார்ட்டில் போட்டுவிட்டு, யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் எஸ்கேப்பாகி அதிர வைத்திருக்கிறார்கள் கணவனும், மனைவியும்.
ஜார்க்கண்ட்டில் மாநிலத்தைச் சேர்ந்த மங்களேஸ்வர் மற்றும் ரஞ்சிதா தம்பதியினர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் பண்ணை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 29ம் தேதி பிரசவத்திற்காக ரயிலில் சொந்த ஊரான ஜார்க்கண்ட் திரும்பிச் சென்றுக் கொண்டிருக்கையில், வழியில் ரஞ்சிதாவுக்கு ரயிலிலேயே பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை மங்களேஸ்வரர் எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் பிறந்த குழந்தைக்கு சில மருத்துவ சிகிச்சை தேவைப்பட அக்குழந்தையை மருத்துவர்கள் அருகிலிருந்த லூர்து மருத்துவமனையில் NICUக்கு மாற்றினர். ரஞ்சிதா பொதுமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.
மங்களேஸ்வரர், மனைவியையும், குழந்தையையும் மாறிமாறி பார்த்து வந்தார். இந்நிலையில், ரஞ்சிதா உடல் முன்னேற்றம் அடைந்துள்ளது. குழந்தை தொடர்ந்து NICU ல் இருந்து வந்துள்ளது. குழந்தைக்கு மருத்துவம் பார்க்க கையில் பணம் இல்லாததாலோ அல்லது, பெண்குழந்தை என்பதாலோ பெற்றோர்கள் இருவரும் குழந்தையை பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு செல்ல நினைத்துள்ளனர். இந்நிலையில் ஜனவரி 31ம் தேதி ரஞ்சிதாவும், மங்களேஸ்வரரும் யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர்.
தாய்ப்பால் கொடுக்க அம்மாவும் இல்லை , அன்பும் அரவணைப்பும் கொடுக்க அப்பாவும் இல்லாத நிலையில் பிறந்த குழந்தை அனாதையாக லூர்து மருத்துவமனையில் இருந்தது. இதனைக்கண்ட மருத்துவர்கள், மங்களேஸ்வரர் ரஞ்சிதாவை செல்போனில் தொடர்பு கொண்டனர். தம்பதியினர் ஜார்க்கண்ட் திரும்பிவிட்டதாக மருத்துவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினர்.
அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், குழந்தைக்கு இன்னும் ஒரு மாத காலம் சிகிச்சை தேவைப்படுகிறது எனவும், தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர். குழந்தைக்கு ”ரஞ்சிதாவின் குழந்தை” என்று பெயரிட்ட மருத்துவர்கள் குழந்தையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குழந்தை நலமானதும் கண்டிப்பாக பெற்றோர்கள் குழந்தையைத் தேடி வருவார்கள் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!