அட கொடுமையே... உள்ளாடையில் விஷம் தடவிய காதலி… காதலன் உடல் அழுகி மரணம்!

சீனாவைச் சேர்ந்தவர் சாவ். 59 வயதாகும் இவருக்கு உடல் உறுப்புகள் அழுகி உயிரிழந்து விட்டார். இவர் ஜிங் என்ற பெண்ணை காதலித்து வந்தார். சாவ் அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதனால் ஜிங் மிகவும் ஆத்திரத்தில் ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலனின் உள்ளாடையில் விஷம் தடவ ஆரம்பித்தார்.
2017 முதல் தன்னுடைய காதலன் உள்ளாடையில் அவர் விஷம் தடவி வந்த நிலையில் உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பித்தது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து விட்டார்.
இந்த வழக்கில் அவரது காதலி ஜிங் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கை எதிர்த்து ஜிம் மேல்முறையீடு செய்த நிலையில் அவருடைய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!