அட கொடுமையே... சென்னை கலெக்டரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.11 லட்சம் மோசடி... ரெவின்யூ இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் கைது!

 
ரூபாய் பணம்

சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கில் இருந்த ரூ.11 லட்சத்தை போலி கையெழுத்து மூலம் மோசடி செய்து எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் யாரேனும் பணியின்போது உயிரிழந்து விட்டால், அவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரண உதவி வழங்கும் வகையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் என்ஆர்ஐ வங்கிக் கணக்கு செயல்படுத்தப்படுகிறது.

இளம் நடிகர் கைது

இந்நிலையில் சென்னை ஆட்சியரின் என்ஆர்ஐ வங்கிக் கணக்கில் இருந்து ரூ.11.63 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், என்ஆர்ஐ உதவித்தொகை பெறும் பயனாளி போன்று போலி ஆவணங்களை வழங்கி, அந்த முறைகேடு நடந்திருப்பதாகவும், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியரக துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

காசோலை மோசடி

இந்த புகாரின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீசாரின் விசாரணையில், திருவள்ளூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் தினேஷ் என்பவரை என்ஆர்ஐ உதவித்தொகை பெரும் பயனாளி போன்று நடிக்க வைத்து, போலி ஆவணங்கள் வழங்கி, அவர் மூலம் பணமோசடி செய்திருந்த வருவாய் ஆய்வாளர்கள் இரண்டு பேர் ரூ.11.63 லட்சம் பண மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வேன் ஓட்டுநர் தினேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் என மொத்தம் 3 பேரை போலீசார் கைது செய்து, தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?