அடப்பாவி... ஜன்னல் வழியே ரயில் பயணியை அடித்து ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்!

 
ஜன்னல் வழியே ரயில் பயணியை அடித்து ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்
நாடு முழுவதுமே ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. ரீல்ஸ் மோகத்தால் பலரும் தங்களது வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். நிமிஷ நேர சந்தோஷமும், லைக்ஸ் மற்றும் ஷேர்களுக்காக என்ன செய்கிறோம் என்பதையே மறந்து உயிரைப் பணயம் வைத்தும் வீடியோ பதிவிடுகின்றனர். 

இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் சமயங்களில் சுற்றியிருப்பவர்களின் உயிருக்கும் உலை வைக்கும் விதமாகவும் மாறிவிடுகிறது. 

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகளவில் லைக்ஸ் பெறுவதற்காக ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த, முன்பின் தெரியாத பயணி ஒருவரை, ரயில் நிலைய பிளாட்பார்மில் நின்றுக் கொண்டிருந்த ஒருவர், ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதற்காக ரயில் புறப்படுகிற நேரத்தில் அவரை அடித்துவிட்டு அதை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பதிவு செய்யப்பட்ட வீடியோவில், “ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் பயணி ஒருவரை, பிளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருக்கும் இளைஞர் ஒருவர் திடீரென்று கன்னத்தில் அறைந்து விட்டு, எதையோ சாதித்தது போல ஒய்யாரமாக நடந்து செல்கிறார்.
பயணியை அடித்துவிட்டு சிரித்தபடியே செல்லும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம் பெற்று இருந்தது. 

 

இது என்ன மாதிரியான மனநிலை.. என்று சமூக வலைத்தளங்களில்  இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கொந்தளித்து, பயணியை அடித்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வே போலீசாரை டேக் செய்தனர்.

இதையடுத்து ரயில்வே போலீசார் இது குறித்து விசாரித்ததில், பயணியை அடித்த நபரின் பெயர் ரிதேஷ் குமார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வியூஸ் பெறுவதற்காக இப்படி நடந்து கொண்டதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். 

ஜன்னல் வழியே ரயில் பயணியை அடித்து ரீல்ஸ் பதிவிட்ட இளைஞர்

போலீசார் விசாரணையின் போது தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ள ரிதேஷ்குமார், தனது தவறை உணர்ந்து விட்டதாகவும் செயலுக்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். அனுரகா நாராயண சாலை ரயில்வே நிலையத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ பதிவு செய்வதற்ற்காக முன்பின் தெரியாத பயணியை அடித்ததாகவும், எனது தவறை நான் உணர்ந்து விட்டேன் என்று உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?