“அய்யய்யோ.. பாதுகாப்பில்லையா?”நடிகர் விஜய் குறித்து நக்கலாக கலாய்ந்த அமைச்சர் துரைமுருகன்!

தவெக தலைவர் விஜய் மகளிர்களுக்கு பாதுகாப்பிலாத ஆட்சியாக உள்ளது என பேசியது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் நக்கலாக, ‘அய்யய்யோ’ என கூறினார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கி துவங்கியதை அடுத்து வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஜாப்ராபேட்டை பகுதியில் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்த விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறையின் அமைச்சர் துரைமுருகன் கலந்துக் கொண்டு மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.88.27 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “பெண்கள் வளர்ச்சிக்காக சுய நிதி வேண்டும் என மகளிர் குழுக்களை அமைத்தோம் ஒரு காலத்தில் ஸ்டாலின் பொறுப்பேற்ற போது நன்றாக இருந்த குழுக்கள் 10 ஆண்டுகளில் நசிந்து போனது அதனை நன்றாக்கும் வகையில் முதல்வர் சென்னையில் அப்பணியை துவங்கினார் இங்கு நானும் கடனுதவிகளை வழங்கினேன்” என்றார்.
பின்னர் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நடிகரும் தவெக தலைவருமான விஜய் திமுக ஆட்சியை அகற்ற வேண்டுமென கூறியுள்ளது குறித்து கேட்ட போது அமைச்சர் துரைமுருகன் மௌனமாக சென்றார். பின்னர் மகளிர்களுக்கு பாதுகாப்பிலாத ஆட்சியாக உள்ளது என விஜய் பேசியது குறித்து கேட்டதற்கு அமைச்சர் துரைமுருகன் நக்கலாக அய்யய்யோ என சொன்னார். பின்னர் மீண்டும் அது குறித்து கேட்ட போது, ‘அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என கூறினார்.
பின்னர் மேகதாதுவில் அணை கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக கர்நாடக அரசு கூறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், “தமிழக அரசின் அனுமதியில்லாமல் அவர்கள் தலைகீழாக நின்றாலும் மேகதாதுவில் அணைக்கட்ட முடியாது” என கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!