வீட்ல யாருமில்ல... வகுப்புத் தோழியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் அதிரடி கைது!

 
சிறுமி

அண்மைக்காலமாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சேலத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கு நேற்று திடீரென வயிற்றுவலி ஏற்பட்டு துடித்துள்ளார். இதனால் உடனடியாக சிறுமியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சிறுமி

அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது அச்சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவன் தன்னுடன் தொடர்பில் இருந்தார் என்று அச்சிறுமி தெரிவித்தார்.

தாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாகவும், சிறுவன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி,  மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். குறிப்பாக பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அச்சிறுவன் வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. வீட்டில் பெற்றோர் இல்லாத நேரங்களில், மாணவி, சிறுவனை வரச் சொல்லி அழைத்ததாக கூறப்படுகிறது.

சிறுமி

பின்னர் இது குறித்து அம்மாப்பேட்டை மகளிர் போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். இதையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் இருவருக்கும் 10ம் வகுப்பு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web