டெஹ்ரானில் எண்ணெய் மழை? போர் தாக்குதலால் சுற்றுச்சூழல் அபாயம்... பகீர் வீடியோ!

 
ஈரான் ஈரான்

மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலை எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த தாக்குதல்களின் பின்னர் காற்றில் அபாயகரமான ரசாயனங்கள் கலந்ததால் அங்கு விசித்திரமான மழை நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்களில் பல எண்ணெய் நிலையங்கள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக காற்றில் சல்பர், நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் பல ஹைட்ரோகார்பன் சேர்மங்கள் அதிகமாக கலந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ரசாயனங்கள் மழை நீருடன் சேரும்போது கருமையான துகள்களுடன் கூடிய எண்ணெய் மழை போல பெய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபோன்ற மழை மனிதர்களின் உடல்நலத்திற்கும், தாவரங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். டெஹ்ரானில் ஏற்பட்டுள்ள இந்த சூழல், போர் தாக்குதல்கள் மனித உயிர்கள் மட்டுமல்லாமல் இயற்கை சூழலுக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!