48 ஆண்டுகளுக்கு பின் மண்ணில் புதைக்கப்பட்ட எண்ணெய்க்குடம் தோண்டி எடுப்பு!
நத்தம் கிராமத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான சன்னியாசியப்பன் கோயிலில் அரிய வழிபாடு நடைபெற்றது. 1978ஆம் ஆண்டு முதல் ஊர் நலம், மழை மற்றும் கால்நடை வளம் வேண்டி 3 அடி ஆழத்தில் 18 லிட்டர் இலுப்பை எண்ணெய் நிரப்பிய மண்பானை புதைத்து வழிபட்டு வந்தனர். 48 ஆண்டுகள் நிறைவடைந்ததால், கடந்த வெள்ளிக்கிழமை அந்த மண்பானை சிறப்பு பூஜைகளுடன் வெளியே எடுக்கப்பட்டது.
8 நாட்கள் விரதம் இருந்த பக்தர் ஒருவர் குடத்தை தலையில் ஏந்தி கிராமம் முழுவதும் சுற்றி, அருகிலுள்ள ஓடையில் சேர்த்தார். பின்னர் மீண்டும் எண்ணெய் சாதகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. ஊர் பிரமுகரும், ஊராட்சி மன்ற தலைவருமான கரியச்சேரி சேகர் தலைமையில் விழா நடைபெற்றது.
மூலவர் அருகே அதே இடத்தில் மீண்டும் 3 அடி பள்ளம் தோண்டி, 18 லிட்டர் இலுப்பை எண்ணெய் நிரப்பிய மண்பானை சிறப்பு பூஜைகளுடன் புதைக்கப்பட்டது. 20 பக்தர்கள் விரதம் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் முன்னிலையில் விழா நடைபெற்றது. இந்த பாரம்பரிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
