மேலும் 1000 பேரை பணிநீக்கம் செய்யும் ஓலா... ஊழியர்கள் அதிர்ச்சி!

 
ஓலா


கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பெருநிறுவனங்கள் செலவை சமாளிக்க அவ்வப்போது ஊழியர்களை பணிநீக்கம் செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் தொடர்ந்து இழப்புகளை சந்தித்து வருவதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் முடிவை எடுத்துள்ளது.  இதன்படி வேலை குறைப்பு கொள்முதல் பூர்த்தி செய்தல் வாடிக்கையாளர் உறவு மற்றும் சார்ஜி உள்கட்டமைப்பு உட்பட  பல துறைகளில் பாதிக்கப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்  ஆகஸ்ட் 2023 தனது பங்குகளை விற்பனை செய்தது. அதன் பின்னர் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது.

 

ஓலா
2023 டிசம்பரில் இருந்து ஓலா நிறுவனத்தின் இழப்புகள் 50% அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா எலக்ட்ரிகின் பங்கு அதன் உச்சத்தில் இருந்து 60% க்கும் அதிகமாக சரிந்துள்ளது. வாடிக்கையாளர்களின் புகார்கள் சமூக ஊடக புகார்கள் மற்றும் போட்டி நிறுவனங்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால்  நவம்பர் 2023ல்  ஓலா சுமார் 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஓலா


இதன் பின்னர்  மார்ச் 2024 நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக்கின் நிறுவனத்தில் 4000 பணியாளர்கள் கால் பங்குக்கும் அதிகமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒப்பந்த பணியாளர்கள் நிறுவனத்தின் பொது வெளியீடுகளில் சேர்க்கப்படாததால் சரியான பணி நீக்க தகவல்கள் எதுவும் விளக்கமாக  தெரியவில்லை. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்துதல், செலவுகளை குறைத்தல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவாகும் என ஓலா நிறுவன செய்தி தொடர்பாளர்  கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web