120 அடி கிணற்றில் 3 நாட்களாக மாட்டிக் கொண்ட முதியவர்!! திக் ..திக்.. நிமிடங்கள்!!

 
 புதுச்சேரி

கடலூர் மாவட்டம் பட்டாம்பாக்கம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மடுகரை பகுதியில் அவர் நடந்துசென்றபோது எதிர்பாராதவிதமாக 120 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்து விட்டார். கிணறு இருந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத இடம்.

இதனால் அவர் கூக்குரல் எழுப்பியும் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் ஒன்று அல்ல, இரண்டு அல்ல மூன்று நாட்களாக கிணற்றுக்குள் கிடந்து தவித்துள்ளார். அவரது கத்தல் சத்தம் குறைந்துகொண்டே சென்றதால் அப்பகுதியினர் யாருக்கும் தெரியவில்லை. 3 நாட்களாய் அவர் கத்தி கத்தி மயக்கமடைந்துள்ளார்.

 புதுச்சேரி

மீண்டும் இன்று காலை லேசாக மயக்கம் தெளிய, மீண்டும் தன்னை காப்பாற்றும் படி கத்தியுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற ஒருவர், கிணற்றுக்குள் முதியவர் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க மடுகரை தீயணைப்பு வீரர்களும் கிராம மக்களும் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாவாடையை மீட்டனர்.

 புதுச்சேரி

நெற்றியில் காயத்துடன் மடுகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். மூன்று நாட்களாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவர் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

  

From around the web