பழைய ஓய்வூதிய திட்டம்: 23 வருட காத்திருப்பு முடிவுக்கு வருகிறதா? இன்று முதல்வர் ஸ்டாலின் "மெகா" அறிவிப்பு!

 
ஜாக்டோ ஜியோ

தமிழகத்தில் சுமார் 6.24 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த இறுதி முடிவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (ஜனவரி 3, 2026) முறைப்படி அறிவிக்க உள்ளார்.

பேச்சுவார்த்தையில் கிடைத்த வெற்றி:
நேற்று (ஜனவரி 2) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையிலான அமைச்சர்கள் குழு, போராட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்த ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO) மற்றும் போட்டோ-ஜியோ (FOTA-GEO) அமைப்புகளுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், "அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. முதலமைச்சர் நாளை (இன்று) அரசு ஊழியர்கள் மகிழும் வகையில் ஒரு நல்ல செய்தியை வெளியிடுவார் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்" எனத் தெரிவித்தனர்.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு அமைய உள்ளது. வட்டாரத் தகவல்களின்படி சில முக்கிய அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

ஜாக்டோ ஜியோ

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (CPS) ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே சில மாற்றங்களுடன் அமல்படுத்த 99% வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. ஒருவேளை முழுமையான OPS சாத்தியமில்லை என்றால், மத்திய அரசின் 'ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்' (UPS) போன்றதொரு உறுதியான ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு அறிவிக்கலாம். ஏற்கனவே CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற சுமார் 48,000 பேருக்கும் சாதகமான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாக்டோ ஜியோ

வரும் ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தப் போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது. இன்றைய முதலமைச்சரின் அறிவிப்பு திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், இந்தப் போராட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!