32 ஆண்டு கால மௌன விரததத்தை ஜனவரி 22ல் முடிக்கும் மூதாட்டி... . !

 
சரஸ்வதி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வருபவர்   85 வயது மூதாட்டி. இவர்   32 ஆண்டுகளாக மௌன விரதம் மேற்கொண்டு வருகிறார்.  உத்திரப்பிரதேச மாநிலத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தனது கனவு நனவாகி விட்டதாக கூறுகிறார் இந்த மூதாட்டி. இதற்காகத் தான் 32 ஆண்டு காலம் மௌனவிரதத்தில் இருந்ததாக கூறுகிறார்.  

அயோத்தி
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில்  உலகம் முழுவதும் இருந்து 3000க்கும் மேற்பட்ட விவிஐபிக்கள் கலந்து கொள்கின்றனர். மோடி சிலையை நிறுவும் வேளையில் 8000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வருபவர்   சரஸ்வதி தேவி. இவருக்கு 85 வயது. இவர் தொடர்ந்து   32 ஆண்டுகளாக மவுன விரதம் மேற்கொண்டுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவான ஜனவரி 22ம் தேதியுடன் தனது கனவு நனவாகி விட்டதாகவும்  32 ஆண்டு கால 'மவுன விரதத்தை’ முறித்துக் கொள்ள இருப்பதாகவும்   கூறப்படுகிறது.  1986ல்   தனது கணவர் தேவகினந்தன் அகர்வாலை இழந்தார்.

இதனையடுத்து  தன் வாழ்க்கையை ராமருக்காக அர்ப்பணித்ததாகக் தெரிகிறது.  தொடர்ந்து  பல கோயில்களுக்கு யாத்திரைகள் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் .   1992 டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ராமரின் தீவிர பக்தரான சரஸ்வதி தேவி, அங்கு ராமர் கோயில் கட்டப்படும் வரை மவுன விரதம் இருக்கப்போவதாக உறுதிபூண்டார்.  
2020 வரை தினமும் 23 மணி நேரம் மௌன விரதமும், பிற்பகலில் மட்டும்  1 மணி நேரம் பேசிக்கொண்டும் இருந்திருக்கிறார். 2020ல் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பின் 24 மணிநேரமும் மௌன விரதம் மேற்கொண்டு வருகிறார்.  

அயோத்தி ராமர் கோவில்

அதிலிருந்து இன்றுவரை சைகை மொழியிலும், கடினமான வார்த்தைகளை காகிதத்தில் எழுதிக் காண்பித்தும்  தேவையானதை தெரியப்படுத்துகிறார்.   திங்கட்கிழமை இரவு அயோத்திக்கு தன் பயணத்தை துவங்கியிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் ஜனவரி 22ம் தேதி மவுன விரதத்தை முடித்துக் கொள்ளவிருப்பதாக சரஸ்வதியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம்  தியானம் செய்வதாகவும், ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வதாகவும், காலையிலும், மாலையிலும் ஒரு டம்ளர் பால் குடிப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  மாலையில் ராமாயணம், பகவத் கீதை போன்ற சமயப் புத்தகங்களைப் படிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web